செக்கந்தராபாத்தில் புஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா
பூஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா ஶ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ ஹனுமான் மந்திர், ஸ்கந்தகிரி, செக்கந்தராபாத்தில் August 3, 2012 அன்று மிக விசேஷமாக கொண்டாடப்பட இருக்கிறது.
அன்றைய சுப தினம் காலை 8 மணி அளவில் கோயிலில் வேத பாராயணம், உபனிஷத் பாராயணம், மஹா கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ஆவஹன்த்தி ஹோமம், வசொதரா, பூர்ணாஹுதி, ஏகதாசி ருத்ராபிஷேகம், அலங்காரம், மற்றும் தீப ஆராதனை நடைபெறவுள்ளது. அன்னதானம் நடைபெறுவதற்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மாலை 6.30 மணி அளவில் ஸ்ரீ ஸ்ரீ ஹனுமானுக்கு வடமாலை அணிவிக்கப்படும்.
பக்தர்கள் ஸ்ரீ பெரியவா ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பூஜ்ய ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்தை பெறவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.